திருப்பூர்: விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா


திருப்பூர்: விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா
x

அல்லாளபுரம் மற்றும் சேவூரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்

சேவூரில் ஆஞ்சநேயருக்கு 1008 வடைகளால் மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாளபுரத்தில் 800 ஆண்டுகள் பழமையான பூமிநீளா நாயகி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பால், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

சேவூர் வடக்கு வீதியில், தெப்பக்குளத்து ஆஞ்சநேயர், தனிக்கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயருக்கு இன்று அதிகாலை பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து வெண்ணெய் சார்த்தப்பட்டு, வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. அப்போது ஆஞ்சநேயருக்கு 1008 வடைகளால் மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல சேவூர் கோட்டை அனுமந்தராயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 More update

Next Story