இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
x
தினத்தந்தி 23 Oct 2025 9:24 AM IST (Updated: 23 Oct 2025 8:12 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 23 Oct 2025 2:58 PM IST

    தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்

    அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் செல்ல உள்ளார்.

    29ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அன்றிரவு அங்கேயே தங்கும் முதல்-அமைச்சர், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

  • 23 Oct 2025 2:40 PM IST

    நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

    விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு.

  • 23 Oct 2025 2:22 PM IST

    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • 23 Oct 2025 1:18 PM IST

    ரோகித், ஸ்ரேயாஸ் அரைசதம்... ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.


  • 23 Oct 2025 12:19 PM IST

    நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • 23 Oct 2025 12:18 PM IST

    நீங்களும் அதில் ஒருவர் தானே... ஜெகபதிபாபு கேள்விக்கு ரம்யா கிருஷ்ணன் அளித்த பதில்

    ஜெகபதி பாபு தெலுங்கில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது ரம்யா கிருஷ்ணனிடம், 'சிறுவயதில் இருந்தே உங்களை பலர் 'சைட்' அடித்திருப்பார்கள்' என ஜெகபதி பாபு கூற, 'நீங்களும் அதில் ஒருவர் தானே' என ரம்யா கிருஷ்ணன் பதிலளித்தார்.

  • 23 Oct 2025 11:17 AM IST

    7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 23 Oct 2025 11:16 AM IST

    சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது - அன்புமணி ராமதாஸ்

    சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது. சீனி சக்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது. இந்த உண்மையை திமுக அரசு உணர வேண்டும். உணர்ந்த பின், கடந்த நான்கரை ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 23 Oct 2025 11:15 AM IST

    ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ்

    முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி நடித்து வரும் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story