இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Jan 2026 9:10 AM IST
மோசமான சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்
இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாக் போல்க்ஸ் 3 ஓவர்களில் 67 ரன்களை வாரி வழங்கினார். டி20 போட்டியில் நியூசிலாந்து பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இதுவாகும்.
- 24 Jan 2026 9:05 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு - டெல்லி அணிகள் இன்று மோதல்
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.
இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்து விட்ட ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
- 24 Jan 2026 9:04 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி சாதனை
டி20 போட்டியில் விரட்டிப்பிடித்த தங்களது முந்தைய அதிகபட்ச இலக்கு சாதனையை (சேசிங்) இந்திய அணி சமன் செய்தது.ஏற்கனவே 2023-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா 209 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருந்தது.
- 24 Jan 2026 9:02 AM IST
யு19 உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.
- 24 Jan 2026 9:01 AM IST
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி
இந்தியாவின் பி.வி. சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுயிடம் மோதினார்.
- 24 Jan 2026 8:59 AM IST
ஐ.சி.சி.க்கு வங்காளதேசம் கடிதம்: சமரச தீர்வு கமிட்டி விசாரிக்க வலியுறுத்தல்
இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு சமரச தீர்வு கமிட்டிக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
- 24 Jan 2026 8:57 AM IST
2வது ஒருநாள் போட்டி: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்
இலங்கை, இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- 24 Jan 2026 8:55 AM IST
2வது டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- 24 Jan 2026 8:51 AM IST
இன்றைய ராசிபலன் (24.01.2026): பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள்..!
ரிஷபம்
எதிர்காலத்திற்காக ஒரு தொகையை தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உறவினர்கள் மதிப்பர். மாமியார் மருமகள் உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கட்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை சுமை இருக்காது. மாணவ மாணவிகளுக்கு நல்ல நினைவாற்றல் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்















