இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Jun 2025 10:04 AM IST
மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ரூ.85-ம், ஒரு பவுன் ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 985-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 27 Jun 2025 10:02 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு அளிக்க முடிவு..?
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
- 27 Jun 2025 9:36 AM IST
இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை மேலும் சில நாட்கள் தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 27 Jun 2025 9:33 AM IST
நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.
- 27 Jun 2025 9:31 AM IST
பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிடும்" என்று கூறினார்.
- 27 Jun 2025 9:29 AM IST
முத்தரப்பு டி20 தொடர்: மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
முத்தரப்பு டி20 தொடர் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான ஆடம் மில்னே மற்றும் மேட் ஹென்ரி நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளனர்.
- 27 Jun 2025 9:27 AM IST
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: புதிய விதிமுறை அமல்
சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) உள்ளது போல டெஸ்டிலும் பவுலிங் அணிக்கான நேரக்கட்டுப்பாட்டை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.
- 27 Jun 2025 9:25 AM IST
''கூலி'' - அமீர்கானின் சிறப்பு தோற்றம் குறித்து வெளியான தகவல்
சமீபத்திய தகவலின்படி, அந்த 15 நிமிடங்கள் அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான அதிரடி காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக அமீர்கான் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது.
- 27 Jun 2025 9:23 AM IST
ஜூலை 4-ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது.
- 27 Jun 2025 9:09 AM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்
2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுடன் தடுமாறி வருகிறது. டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
















