இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Oct 2025 11:04 AM IST
கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- 9 Oct 2025 11:02 AM IST
எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு
எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
- 9 Oct 2025 11:01 AM IST
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை: வெளியான பரபரப்பு தகவல்
அமிதாப் பச்சன் படத்தில் நடித்த நடிகர் பாபு சேத்ரி இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
- 9 Oct 2025 11:00 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.
- 9 Oct 2025 10:19 AM IST
ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம் ரத்து
வரும் 12-ந் தேதி தமிழகம் வருவதாக இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 Oct 2025 10:17 AM IST
கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்துள்ள முதல்-அமைச்சர், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
- 9 Oct 2025 10:11 AM IST
மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா- வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- 9 Oct 2025 10:10 AM IST
துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.
- 9 Oct 2025 10:08 AM IST
மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்- நடிகர் சிவராஜ்குமார் கருத்து
விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
- 9 Oct 2025 10:07 AM IST
காசா அமைதி திட்டம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.


















