இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Oct 2025 10:05 AM IST
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்: செனட் சபையில் அங்கீகாரம்
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார்.
- 9 Oct 2025 10:04 AM IST
கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குனர் யார் தெரியுமா?
இன்பநிதி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 Oct 2025 10:02 AM IST
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்
இரு நாடுகளும் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி இரு தலைவர்களும் ஆய்வு செய்கிறார்கள்.
- 9 Oct 2025 10:00 AM IST
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- 9 Oct 2025 9:55 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தவெசு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கடந்த 29-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
- 9 Oct 2025 9:54 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் - ஐநா வரவேற்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குட்ரெஸ் கூறுகையில், “ ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்குமாறு இஸ்ரேல்-ஹமாஸை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் கண்ணியமான முறையில் விடுவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு உடனடியாகவும், தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
- 9 Oct 2025 9:53 AM IST
விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் திடீர் ஆய்வு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரிகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.
- 9 Oct 2025 9:52 AM IST
மதுரையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர் கைது
மதுரையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- 9 Oct 2025 9:48 AM IST
20 குழந்தைகள் பலி: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- 9 Oct 2025 9:46 AM IST
ஜி.டி.நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு
கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை திறந்து வைக்கிறார்.


















