நெல்லையில் வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டல்: 2 பேர் கைது

நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டு கத்தியைக் காட்டி 2 பேர் மிரட்டியுள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் திரையரங்கம் அருகே நேற்று (2.5.2025) சாலையில் நடந்து சென்ற சந்திப்பு சி.என்.கிராமம், மேலத் தெருவை சேர்ந்த இசக்கிப்பாண்டி (வயது 28) என்பவரை, பாளையங்கோட்டை, நடுவக்குறிச்சியை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இசக்கிப்பாண்டி(38) மற்றும் பாளையங்கோட்டை, திம்மராஜபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் மகாராஜன்(38) ஆகிய 2 பேரும் வழிமறித்து, மது அருந்த பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சந்திப்பு காவல் துறையினர் அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
Related Tags :
Next Story






