தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் 2 வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சரண் (வயது 20) மற்றும் வல்லவன்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் அருண்குமார்(25) ஆகிய 2 பேரும், தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது 12.10.2025 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து மேற்சொன்ன 2 பேரும் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம், ஒழுங்கு) தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com