நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொன்னாங்குடி பாலம் அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், எட்வின் அருண்ராஜ் மற்றும் காவலர்கள் நேற்று அதிகாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனம் ஓட்டி வந்த கொங்கத்தான்பாறை அதிபன் பாலாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், வாகனத்தை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான கணேஷ் புகையிலை, கூல் லிப், விமல் பான் மசாலா, v1 டோபாக்கோ ஆகியவை வெள்ளை மூட்டையில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோது, மேலும் 2 நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட பொருட்கள் சுமார் 500 கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெரிய மூட்டை 43, சிறிய மூட்டை 8 ஆகியவற்றில் மேற்சொன்ன பொருட்கள் இருந்தது. மேலும் காவல்துறையின் விசாரணையில் மேலும் ஒருவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் என்பவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com