நெல்லையில் தொழிலாளியை அவதூறாக பேசி மிரட்டல்: வாலிபர் கைது


நெல்லையில் தொழிலாளியை அவதூறாக பேசி மிரட்டல்: வாலிபர் கைது
x

வள்ளியூரில் மாதவனிடம் வேலை செய்த நேரத்தில் தீபபாலனுக்கு ஒரு நாள் சம்பளம் பாக்கியாக இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், வள்ளியூர், தெற்கு கள்ளிகுளம், சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தீபபாலன் (வயது 28), கோட்டை கருங்குளம், வடிவம்மன்பட்டி, மேற்கு தெருவை சேர்ந்த மாதவன் (29) என்பவரோடு (Fabrication Sheet work) வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது தீபபாலன் வேறு ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வருகிறார். மாதவனிடம் வேலை செய்த நேரத்தில் தீபபாலனுக்கு ஒரு நாள் சம்பளம் பாக்கியாக இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

30.4.2025 அன்று தீபபாலன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மாதவன் தீபபாலனிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து தீபபாலன் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாதவனை நேற்று (2.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

1 More update

Next Story