காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
x
தினத்தந்தி 12 Jun 2025 7:37 AM IST (Updated: 12 Jun 2025 7:41 AM IST)
t-max-icont-min-icon

8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழைக்கு (ஆரஞ்சு அலர்ட்) வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story