காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மோந்தா புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்நிலையில் மோந்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்றும், இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை

திருவள்ளூர்

திருவண்ணாமலை

வேலூர்

திருநெல்வேலி

விழுப்புரம்

தென்காசி

திருப்பத்தூர்

தூத்துக்குடி

கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

 புழல் ஏரி

இந்நிலையில் சென்னை புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com