வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறுமா? வானிலை அப்டேட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை இயல்படை விட 59 சதவீதம் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியுள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறுமா? வானிலை அப்டேட்
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை இயல்பை  விட 59 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. தெற்கு அந்தமான் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என நாளை கூற முடியும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் அருகே மண்டலமாக வலுப்பெறும்.  சென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிறுவுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அக்.1 முதல் அக்.21 வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ ; இயல்பு 10 செ.மீ. 16 மாவட்டங்களில் இயல்பு, இயல்பை விட மிக அதிகமாக கனமழை பதிவாகி உள்ளது. சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com