ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது - அமெரிக்கா


ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது - அமெரிக்கா
x

ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது.

வாஷிங்டன்,

ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலின் கூறுகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துக்கொண்டதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, ஜனாதிபதி டிரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது’ என்றார்.

1 More update

Next Story