நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை


நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 22 March 2024 5:56 AM GMT (Updated: 22 March 2024 6:36 AM GMT)

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

* கவர்னரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்

* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

* தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.

* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்

* சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

* பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும்.

* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.

* பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.

* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.


Next Story