'தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை' - கனிமொழி எம்.பி. விமர்சனம்


தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை - கனிமொழி எம்.பி. விமர்சனம்
x

தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக பேசக்கூடியவர்தான் இன்று தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கிறார் என கனிமொழி எம்.பி. விமர்சித்தார்.

தூத்துக்குடி,

2024 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது;-

"தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை, கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர், 'எனக்கு தமிழ்நாட்டைப் பிடிக்காது, நான் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடர், இங்குள்ள மக்கள்தான் என் மக்கள், கன்னடம்தான் என் மொழி' என்று சொன்னவர்.

இந்தியாவை என்னுடைய நாடு என்றும், அனைத்து மக்களும் என்னுடைய மக்கள் என்றும் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் தமிழ்நாட்டில் கிடைத்த சலுகைகளைக் கொண்டு படித்து, ஒரு இடத்தில் போய் பணியாற்றும்போது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக பேசக்கூடிய ஒரு நபர்தான் இன்று தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கிறார்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.




Next Story