பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது - கனிமொழி பிரசாரம்
பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.
தூத்துக்குடி,
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
தேவையில்லாத சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மையினருக்கு பல்வேறு கஷ்டங்களை கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவே இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும். இன்னும் பல்வேறு சலுகைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்படும். புன்னக்காயல் கிளை தபால் நிலையத்தை துணை தபால் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.