அரசியல் சட்டத்தை அழிக்க பா.ஜனதா விரும்புகிறது - ராகுல்காந்தி
பா.ஜனதா வெற்றி பெற்றால் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், பொதுத்துறையை தனியார் மயமாக்கி விடுவார்கள், நாட்டை 22 கோடீஸ்வரர்கள் ஆளுவார்கள். இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள். பா.ஜனதா இந்த புத்தகத்தை (அரசியலமைப்புச் சட்டம்) கிழிக்க விரும்புகிறது, ஆனால் காங்கிரசும் இந்திய மக்களும் அதை அனுமதிக்க மாட்டோம். எனவேதான் மக்கள் ஆட்சி அமைய வேண்டும்.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story