மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும் - எச்சரித்த நிர்மலா சீதாராமனின் கணவர்


மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும் - எச்சரித்த நிர்மலா சீதாராமனின் கணவர்
x

மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என்று நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்- மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்சினை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான்.

இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்" என்றார்.

நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ள எச்சரிக்கை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story