இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜே.பி.நட்டா


இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜே.பி.நட்டா
x

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடி 39 நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, வருகிற 9, 10 மற்றும் 13, 14-ந்தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, கேரளாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு ஜே.பி.நட்டா நேற்று (சனிக்கிழமை) இரவு வருகை தந்து, நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை சிதம்பரம் செல்லும் அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

அங்கிருந்து, ஹெலிகாப்டரில் கரூர் சென்று, கரூர் பா.ஜனதா வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து, விருதுநகர் சென்று அங்கு, பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

அதன்பிறகு, திருச்சி வருகை தந்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு இரவு7 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


Next Story