ம.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு


ம.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
x
தினத்தந்தி 6 April 2024 2:03 AM GMT (Updated: 6 April 2024 2:08 AM GMT)

மக்களவை தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன

இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், மக்களவை தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. அந்த அறிக்கையை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுகிறார். மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.


Next Story