ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமை வாய்ந்த தலைவர்: ஜே.பி.நட்டா பேச்சு


ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமை வாய்ந்த தலைவர்: ஜே.பி.நட்டா பேச்சு
x

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்கு சேகரித்தார்.

பரமக்குடி,

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரமும் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் 3 கி.மீ வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வேனில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜே.பி.நட்டா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமை வாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். ஓ.பன்னீர்செல்வத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தை எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்திற்கு 4 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story