நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: மராட்டியத்தில் 12 வேட்பாளர்களை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:  மராட்டியத்தில் 12 வேட்பாளர்களை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
x

7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 பட்டியல்களில் 82 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

புனே,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் கமிட்டியின் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில், மக்களவை தேர்தலில் 18 முதல் 19 தொகுதிகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டோம். 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர் என மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, இதேபோன்று, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரை இன்று சந்தித்து மீதமுள்ள இடங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், நாளை அல்லது நாளை மறுநாள் அனைத்து தொகுதிகள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 பட்டியல்களில் 82 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.


Next Story