ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்துப் போட்டி - பா.ஜ.க. அறிவிப்பு
ஒடிசாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் இந்த முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமால் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியடைந்த ஒடிசா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கிட, ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story