பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப்போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்
எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை செங்கலை காண்பிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
"தி.மு.க.வுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆமாம், அவர் சொல்வது போல் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை.
தேர்தல் பிரசாரத்தை தூக்கமில்லாமல் மேற்கொள்ள போகிறோம். தி.மு.க. இளைஞரணியினர் அடுத்த 22 நாட்கள் தூங்காமல் வேலை பார்க்க வேண்டும். தேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைப்பது போல் பிரதமர் மோடி நாடகமாடுகிறார்.
உதயநிதிக்கு வேலையே இல்லை, எப்போது பார்த்தாலும் ஒரு செங்கலை காண்பிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆம், நான் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை செங்கலை காண்பிப்பேன்" என்றார்.
Related Tags :
Next Story