தோனி, பண்ட் இல்லை... அவர்தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - ரோகித் சர்மா


தோனி, பண்ட் இல்லை... அவர்தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - ரோகித் சர்மா
x

image courtesy:PTI

தினத்தந்தி 19 Dec 2025 4:23 PM IST (Updated: 19 Dec 2025 4:24 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் குறித்து தனது கருத்தினை ரோகித் சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அத்துடன் இந்திய அணிக்கு ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.

அப்படிப்பட்ட அவர் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் விருத்திமான் சஹாதான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று தெரிவித்துள்ளார்.

மகேந்திரசிங் தோனி, ரிஷப் பண்ட் உடன் ரோகித் நிறைய போட்டிகளில் ஆடியுள்ள வேளையில் விருத்திமான் சஹாவை அவர் தேர்வு செய்துள்ளது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பேசிய ரோகித் சர்மா, “நாங்கள் இருவரும் (சஹா மற்றும் அவர்) சேர்ந்து பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். நான் ஸ்லிப் கார்டனில் அவருக்கு அருகில் நின்றிருக்கிறேன். அவர் என் முன்னால் நிறைய கேட்சுகளை பிடித்திருக்கிறார். ஆனால் சஹா போன்ற ஒரு விக்கெட் கீப்பரை நான் பார்த்ததில்லை.

அவர் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. என் வார்த்தைகள் எதையும் மாற்றாது. ஆனால் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் பார்த்திருந்தால், நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.

1 More update

Next Story