ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

சூர்யவன்ஷி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

துபாய்,

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். மாத்ரே 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜார்ஜ் உடன் ஜோடி சேர்ந்த சூர்யவன்ஷி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜார்ஜ் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மல்ஹோத்ராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் குவித்தார்.

அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பந்து வீச்சை சிதறடித்த வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவர் 95 பந்துகளில் 9 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் உள்பட 171 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 433 ரன்கள் குவித்தது. 434 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களமிறங்கி விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com