காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்


காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்
x

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் பதான் படத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அங்குள்ள வணிக வளாகத்தில் படத்தை விளம்பரம் செய்ய வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவப்பட போஸ்டர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள 'பதான்' இந்தி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சி சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே சிலர் ஷாருக்கான் கொடும்பாவியை எரித்தனர். மத்தியபிரதேச மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் பதான் படத்தை திரையிட அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டி வரும் என்று தெரிவித்தார். பீகாரிலும் 'பதான்' படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று பா.ஜனதா தலைவர் ஹரி பூஷன் தாக்கூர் எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் பதான் படத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அங்குள்ள வணிக வளாகத்தில் படத்தை விளம்பரம் செய்ய வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவப்பட போஸ்டர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.

பதான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் மத்தியபிரதேசம், பீகார், குஜராத் ஆகிய 3 மாநிலங்களிலும் பதான் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பதான் படத்தை மறுதணிக்கை செய்யவும் ஏற்பாடுகள் நடக்கிறது.


Next Story