நான் 'லியோ' படத்தை இயக்கியிருந்தால்... - நெல்சன் திலீப்குமார்


நான் லியோ படத்தை இயக்கியிருந்தால்... - நெல்சன் திலீப்குமார்
x
தினத்தந்தி 26 April 2024 4:10 AM GMT (Updated: 26 April 2024 5:14 AM GMT)

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் லியோ படம் குறித்து பேசியுள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர். இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்தார். அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும்மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் லியோ படம் குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார்.


Next Story