'பதான்' படம் சர்ச்சை: ஷாருக்கான் வீடு முன்பு திரண்ட ரசிகர்கள்


பதான் படம் சர்ச்சை: ஷாருக்கான் வீடு முன்பு திரண்ட ரசிகர்கள்
x

மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன்னால் ஆயிரகணக்கான ரசிகர்கள் திடீரென திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

சர்ச்சையில் சிக்கி உள்ள ஷாருக்கானின் பதான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை (25-ந்தேதி) ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர்.

அதில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்ததை இந்து அமைப்பினர் எதிர்த்தனர். மத உணர்வை புண்படுத்தி விட்டதாக போலீசிலும் புகார் அளித்தனர். ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த பதான் பட பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.

எதிர்ப்பை தொடர்ந்து பதான் படத்தை மறுதணிக்கை செய்து சர்ச்சை காட்சிகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன்னால் ஆயிரகணக்கான ரசிகர்கள் திடீரென திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். இதை அறிந்த ஷாருக்கான் உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்களை பார்த்து கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது.

1 More update

Next Story