விமானத்தில் கடத்தி வந்த செல்போன்கள், தங்கம் பறிமுதல்


விமானத்தில் கடத்தி வந்த செல்போன்கள், தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Nov 2017 2:51 AM IST (Updated: 6 Nov 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.35½ செல்போன்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கில் இருந்து வந்த விமானம் ஒன்று தரைஇறங்கியது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஒரு பயணி வைத்திருந்த உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 11 விலையுயர்ந்த செல்போன்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் ஆகும்.

இந்தநிலையில், அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் தங்கம், செல்போன்கள் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story