2 கூலி தொழிலாளர்கள் மர்ம சாவு தொடர்பான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு


2 கூலி தொழிலாளர்கள் மர்ம சாவு தொடர்பான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 May 2018 10:15 PM GMT (Updated: 19 May 2018 6:54 PM GMT)

விருதுநகர் அருகே கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 கூலி தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

சாத்தூர் அருகே உள்ள நடுச்சூரங்குடியை சேர்ந்தவர்கள் ஞானசேகர் (வயது 33), திலகராஜ் (32). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20–ந்தேதி விருதுநகர் அருகே உள்ள அழகநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மேற்கே கண்ணாயிரம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இவர்கள் இருவரும் வேப்பிலைபட்டி கிராமத்தில் அர்ஜூனா ஆற்றுப்படுகையில் அனுமதியில்லாமல் மணல் அள்ளிக்கொண்டு இருக்கும் போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது கண்ணாயிரம் என்பவரின் தோட்டத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணாயிரத்தையும், அவரது மகன் உதயகுமாரையும் கைது செய்தனர். இறந்த கூலி தொழிலாளர்களின் உறவினர்கள் போலீசார் தாக்கியதில்தான் அவர்கள் இறந்ததாக குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ஞானசேகரனின் மனைவி மாரியம்மாளும், திலகராஜியின் மனைவி ஆனந்தலட்சுமியும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு மாற்றகோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். விசாரணைக்கு பின்னர் இந்த

வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் இயக்குனர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story