அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை விதிக்க தவறிய மும்பை மாநகராட்சி கமிஷனர் இன்று ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை விதிக்க தவறிய மும்பை மாநகராட்சி கமிஷனர் இன்று ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை விதிக்க தவறிய மும்பை மாநகராட்சி கமிஷனரை இன்று நேரில் ஆஜராக கூறி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை, 

அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை விதிக்க தவறிய மும்பை மாநகராட்சி கமிஷனரை இன்று நேரில் ஆஜராக கூறி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை

தெற்கு மும்பை பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான பாட்டியா கட்டிடத்தின் பின்புறம் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளாலும் தங்களது வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக குடியிருப்புவாசிகள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு தடை விதித்ததோடு, இது குறித்து ஆய்வு செய்து மே 22-ந் தேதி(நேற்று முன்தினம்) அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

நேரில் ஆஜர்

இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி கதாவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த போதிலும் அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனே நீதிபதி, ‘மாநகராட்சி அதிகாரிகள் பாட்டியா கட்டிடத்தில் வசிப்பவர்களின் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இப்படிதான் ஒரு மாநகராட்சி செயல்படுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணையில் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு மும்பை மாநகராட்சி கமிஷனர் அோய் மேத்தாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story