மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை - சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம்


மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை - சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம்
x
தினத்தந்தி 10 Jun 2019 3:45 AM IST (Updated: 10 Jun 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

மராட்டியம், ஜார்கண்ட், அரியானா ஆகிய 3 மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால், அவற்றின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த மாநிலங்களில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, சட்டசபை தேர்தலுக்கான தயார்நிலை பற்றி விவாதம் நடந்தது. அங்குள்ள அரசியல் நிலவரம், பா.ஜனதா பின்பற்ற வேண்டிய வியூகம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story