தேர்தல் களத்தில் ருசிகரம்: மழலையின் புன்னகையில் விழுந்த பிரதமர் மோடி


தேர்தல் களத்தில் ருசிகரம்: மழலையின் புன்னகையில் விழுந்த பிரதமர் மோடி
x

பிரசாரத்தை முடித்து விட்டு திரும்புகையில் கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணிடம் இருந்த ஆண் குழந்தையை (அவிந்த் )பார்த்து சிரித்தார்.

போபால்,

மத்தியபிரதேசம் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஒரு தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேசத்தில் வருகிற 17 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி அங்கு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

சியோனி என்ற பகுதியில் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்புகையில் கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணிடம் இருந்த ஆண் குழந்தையை (அவிந்த் )பார்த்து சிரித்தார். பதிலுக்கு அந்த குழந்தையும் புன்முறுவலை அளித்தது.

இதனையடுத்து அந்த குழந்தையை கையில் வாங்கிய பிரதமர் மோடி, சிறிது நேரம் அதனிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தையின் புன்னகையால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அந்த 10 மாத குழந்தையை தாயிடம் கொடுத்து பயணத்தை தொடர்ந்தார்.


Next Story