மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு


மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
x

மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகின. ஆனால் மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ள சம்பவம் இந்தியா கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story