ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது


ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
x

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை காசிமேடு பகுதியில் விற்பனை செய்ய ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் திருவொற்றியூர் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வேகமாக சென்ற சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு கார் மூலம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர பிரசாத் (வயது 38), வெங்கடாபதி (30), சிவக்குமார் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story