சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 3-ந்தேதி அண்ணாமலை ஆலோசனை


சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 3-ந்தேதி அண்ணாமலை ஆலோசனை
x

கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story