பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி


பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி
x

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற நபர் பல பெண்களை ஏமாற்றி, ஆபாசமாக படம் பிடித்ததுடன், அவற்றை இணையதளத்தில் பதிவிடுவதாகக் கூறி பணம் பறித்ததாக புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காசிக்கு, வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, காசி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே, ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், காசி வழக்கில் இன்னும் இரண்டு வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்க செய்ய வேண்டியது உள்ளதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story