முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது. கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

நாளை மறுதினம் தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.


Next Story