திருமாவளவனிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி..!
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக 3-வது நாளாக மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனிடம், தொலைபேசி மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story