ஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்


ஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்
x

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). கட்டிட வேலை செய்கிறார். இவரது மனைவி சரண்யா (32). இவரும் கட்டிட வேலைக்கு செல்வார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 29-ந்தேதி அன்று எம்.ஜி.ஆர்.நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பழைய வீட்டை சீரமைக்கும் கட்டிட வேலைக்காக சரண்யா சென்றார்.

அப்போது அவருடன் கட்டிட வேலை பார்த்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (47) என்பவர் தகாத செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சரண்யாவை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவரது ஆசைக்கு இணங்க சரண்யா மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் சரண்யாவின் தலையில் சுத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது. படுகாயமடைந்த சரண்யா ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரின், எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தி கொலைவழக்காக பதிவு செய்தனர். பின்னர் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை சுத்தியலால் தாக்கி கொன்ற வேல்முருகனை கைது செய்தனர்.


Next Story