அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
x

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வட மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தென்மாவட்டங்களில் தூர்வாரும் பணி நடந்திருந்தால் தண்ணீர் தேங்கியிருக்காது.

அரசியலில் நாகரீகம் வேண்டும்; நேற்று முளைத்த காளான் உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி மாட்டிக்கொள்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். பக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி என்றால் அது உதயநிதிதான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story