மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மாணவர் பலி


மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மாணவர் பலி
x

நெல்லை மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், ஐந்தாம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஆட்டோவில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி சென்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story