ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு...!


ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு...!
x
தினத்தந்தி 8 May 2023 8:20 PM IST (Updated: 8 May 2023 8:25 PM IST)
t-max-icont-min-icon

டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்கு நேரில் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பன்ருட்டி ராமசந்திரனும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், பன்ருட்டி ராமசந்திரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பன்ருட்டி ராமசந்திரன் கூறியதாவது,

அதிமுக நலம் கருதி அடுத்தக்கட்ட நவடிக்கைகள் எடுக்கப்படும். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது

டிடிவி தினகரன் கூறியதாவது,

எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகி, திமுக பொதுஎதிரி. பண மூட்டை உள்ளவர்களிடம் தேவை கருதி சிலர் செல்கின்றனர்.

ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது,

கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். கிரிக்கெட் போட்டி பார்க்க சென்றபோது மரியாதை நிமித்தமாக சபரீசனை சந்தித்தேன். அது தற்செயலானது, மரியாதை நிமித்தமானது. மனிதருக்கு மனிதர் மரியாதை கொடுக்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. சசிகலாவை விரைவில் சந்திப்பேன்' என்றார்.




Next Story