பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து..!


பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து..!
x

கோப்புப்படம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவருக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'இன்று பிறந்தநாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். திரு.அண்ணாமலை அவர்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!' என்று கூறியுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன்.' என்று கூறியுள்ளார்.




Next Story