வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பப்போகிறார்கள் - ஜேபி நட்டா
வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பப்போகிறார்கள் என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்
கோவை,
கோவையில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பேசியதாவது:-
தமிழ்நாடு பழமையான கலாச்சாரம், நாகரீகம் கொண்ட மண். மிகவும் பழமையான மொழியை கொண்ட மண் இது. இந்த மண்ணும் மக்களும் எங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள்... நான் தமிழ்நாடு மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
இந்தியாவிற்கு புகழை தந்த மிகவும் பழமையான கலாச்சாரம் இது. இங்குள்ள ஆரவாரத்தை பார்க்கும்போது வரும் காலங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி... அதற்கு அடுத்து வரும் சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி நீங்கள் ( தமிழ்நாடு மக்கள்) பாஜகவுக்கு ஆதரவாக திரும்பப்போகிறீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது' என்றார்.
Related Tags :
Next Story