போலீஸ்காரரை தாக்கிய அரசியல் கட்சி பிரமுகர் கைது


போலீஸ்காரரை தாக்கிய அரசியல் கட்சி பிரமுகர் கைது
x

சென்னை அயனாவரத்தில் போலீஸ்காரரை தாக்கிய அரசியல் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை அயனாவரம், வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தேவராஜ் (வயது39). இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேந்திரன், அவருடைய மகன் தேவராஜ் இருவரும் குடிபோதையில் பொதுவெளியில் தகராறு செய்து கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அயனாவரம் போலீஸ்காரர் பிரகாஷ் (35) சம்பவ இடத்துக்கு சென்று தந்தை-மகன் இருவரையும் சமாதானப்படுத்தினார். அப்போது தேவராஜ், "நாங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் வாழும் உனக்கு ஏன் இந்த வேலை?" என்று கூறி போலீஸ்காரர் பிரகாசை தாக்கினார். இதுபற்றி பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story