விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு 'சீல்'


விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு சீல்
x

மீஞ்சூரில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர் சீல் வைத்தார்.

திருவள்ளூர்

மீஞ்சூர் நேதாஜி நகரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் கடந்த மே 1-ந் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மீஞ்சூர் பேரூராட்சி தொழிலாளர்கள் சுப்புராயலு, கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 2 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. நோட்டீஸ் வழங்கியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகம் முன் வராததால் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர் வெற்றியரசு, பள்ளியை பூட்டி பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்தார்.

1 More update

Next Story