திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம் 

வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னை,

பயனிகளின் நலனுக்காகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகமதாபாத் - திருச்சி, மதுரை - ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த சிறப்பு ரெயில்கள் தற்போது நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அகமதாபாத்திலிருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.09419) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 3.45 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து வரும் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (09420) புறப்பட்டதிலிருந்து 2-வது நாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.

இதேபோல, குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து வரும் 11,18, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (09520) புறப்பட்டதிலிருந்து 4-வது நாள் காலை 11.45 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (09519) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும்.

வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (6-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story